மும்பை: நியூசிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் 152 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து விராட் கோலி (1 ரன்), சுப்மன் கில் (1 ரன்) ஆகியோரும் அடுத்தடுத்தும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
மறுமுனையில் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிக் கொண்டு இருந்த மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. ஒருபுறம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல போராடிக் கொண்டு இருந்த நேரத்தில் மறுபுறம் இந்திய வீரர்கள் அவசர கதியில் ஷாட்டுகளை அடித்து ஆட்டமிழந்து வந்தனர்.
Five wickets fall in the first seven overs of the India chase! Ajaz Patel (3-16), Matt Henry (1-10) and Glenn Phillips (1-1) making plays in Mumbai! Follow play LIVE in NZ on @skysportnz 📺 or @SENZ_Radio 📻 LIVE scoring https://t.co/VaL9TehXLT 📲 #INDvNZ #CricketNation 📸 BCCI pic.twitter.com/bnOrXQvHto
— BLACKCAPS (@BLACKCAPS) November 3, 2024
இதனிடையே நீண்ட நேரம் போராடிக் கொண்டு இருந்த நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பன்ட் (64 ரன்) அஜாஸ் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு ஏறக்குறைய மங்கிப் போனது. அடுத்தடுத்த களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் அஸ்வின் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிருப்தியை கிளப்பினார். மற்றொருபுறம் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்த மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் (12 ரன்) கடைசி விக்கெட்டாக போல்ட்டாகி ஒட்டுமொத்த இந்திய அணியின் வெற்றி வாய்ப்பையும் நிராசையாக்கினார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. நீண்ட நாட்களுக்கு பின் சொந்த மண்ணில் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யப்பட்டது இதுவே முதக் முறையாகும். நியூசிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிளென் பிலில்பிஸ் 3 விக்கெட்டும், மேட் ஹென்ரி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: Watch: 6,6,6,6,6,6,6 ஹாங் காங்கில் மானத்தை வாங்கிய இந்தியா! அடுத்தடுத்து 7 சிக்சர்கள் விளாசி சாதனை!