ஹைதராபாத்: 9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் நடந்த நிலையில், ஷார்ஜாவில் நேற்று (அக்.18) நடைபெற்ற 2வது அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணியினர் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் வீராங்கனைகள் ஜார்ஜியா பிளிம்மர் 33 ரன்களும், சூஸ் பெட்ஸ் 26 ரன்களும் அதிகபட்ச ரன்களாக எடுத்தனர்.
Two worthy finalists 🔥
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2024
Who takes home the #T20WorldCup 2024 trophy? 🏆
More ➡️ https://t.co/SrgqMVsfk7 pic.twitter.com/pwrgLfN3Tm
இதனை அடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேற, அந்த அணியின் வீராங்கனை தியேந்திரா டோடின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணியினர் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
Riding into the finals 🇿🇦🐪🇳🇿
— T20 World Cup (@T20WorldCup) October 18, 2024
We will have a new #T20WorldCup winner on Sunday 🤩#WhateverItTakes pic.twitter.com/zbRXjgNorW
இதேபோல நேற்று (அக்.18) துபாயில் நடைபெற்ற, மகளிர் டி20 உலகக் கோப்பையின் மற்றொரு அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. மேலும், தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சாளர்கள் திட்டமிட்டபடி பந்து வீசி ஆஸ்திரேலியா அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.
இத்தகைய சூழலில், 135 ரன்கள் எடுத்தால் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து, தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் மற்றும் அன்னேக் போஷ் ஆகியோர் இணைந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இதையும் படிங்க: IND vs NZ 1st Test: இந்திய அணியில் மூவர் அரை சதம்.. நியூசிலாந்து 125 ரன்கள் முன்னிலை!
அந்த வகையில், 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டிய தென்னாப்பிரிக்கா அணியினர் 16 பந்துகள் எஞ்சி இருக்க 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது தென்னாப்பிரிக்கா அணி.
இந்த நிலையில், ஷார்ஜாவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணியும்; துபாயில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நாளை (அக்.20) நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றனர். இரு அணிகளுமே இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்