ETV Bharat / sports

இந்திய தொடரில் மிஸ்சாகும் நியூசிலாந்து நட்சத்திரம்! யார் தெரியுமா?

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் விலகி இருப்பது சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

Etv Bharat
New Zealand Cricket Players (AP)

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. நியூசிலாந்து அணி கடந்த ஒன்றரை மாதமாக ஆசிய கண்டத்தில் சுற்றுப்பயணம் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முற்றிலும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணி சொந்த மண்ணுக்கு சென்று தற்போது ஓய்வில் உள்ளது.

இதனை அடுத்து தற்போது இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில் இந்திய தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுதி விலகினார். தற்போது இந்திய தொடரில் இருந்து மற்றொரு முக்கிய முக்கிய வீரரான கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நியூசிலாந்து அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மைக்கெல் பிரேஸ்வெல் முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தான் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வில்லியம்சன் காயம் குறித்து பேசிய நியூஸிலாந்து அணியின் தேர்வு குழு உறுப்பினர் சாம் வெல்ஸ், வில்லியம்சன் முதல் டெஸ்டில் விளையாட மாட்டார்.

எனினும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் 10 நாட்கள் வில்லியம்சன் வீட்டில் இருந்து தன்னுடைய உடல் தகுதியை மீட்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு வில்லியம்சன் முழு உடல் தகுதியை எட்டி இருந்தால் அவர் இரண்டு அல்லது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட கூடும் என்று தெரிவித்தார்.

வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேனை நியூசிலாந்து அணி தேர்வு செய்து உள்ளது. நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 78 போட்டிகளில் விளையாடி உள்ள மார்க் சாப்மேன், கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து ஏ அணியில் இடம் பிடித்து இருந்தார்.

இந்திய தொடருக்கான நியூசிலாந்து அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளூன்டெல், மைக்கெல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட் மட்டும்), டிம் சவுதி, கேன் வில்லியம்சன், வில் யங்.

இதையும் படிங்க: இந்திய ஜாம்பவானின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்! கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.