ETV Bharat / sports

ஐந்தே ஓவர்களில் முடிந்த மேட்ச்.. உகாண்டாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி! - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

New Zealand vs Uganda Highlights: டி20 உலகக் கோப்பை தொடரின் 32வது லீக் போட்டியில் உகண்டா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது நியூசிலாந்து.

NEW ZEALAND VS UGANDA
NEW ZEALAND VS UGANDA (Credit - ANI)
author img

By PTI

Published : Jun 15, 2024, 10:37 AM IST

டிரினிடாட்: கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் 32வது லீக் போட்டியில், நியூசிலாந்து - உகாண்டா அணிகள் மோதின.

டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய உகாண்டா அணி, நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அந்த அணியில் கே.வைஸ்வா 11 ரன்களைத் தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கை தாண்டவில்லை. இதில் சைமன் செசாசி, ராபின்சன் ஒபுயா, அல்பேஷ் ரம்ஜானி ஆகிய மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஜூமா மியாகி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனால் 18.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது உகாண்டா. இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டியிலும் 39 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது போல இந்தமுறையும் குறைந்த ரன்களுக்கு ஆல் ஆல் அவுட் ஆனது உகாண்டா.

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுகளையும், போல்ட், ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து, 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து அணி.

அந்த அணி ஓபனிங் பேட்ஸ்மேன்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் 9 ரன்கள் எடுத்து இருந்த ஃபின் ஆலன், ரியாத் அலி ஷா வீசிய பந்தில் விக்கெட் இழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 1 ரன்கள் எடுக்க, மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான டெவோன் கான்வே 22 ரன்கள் விளாசினார்.

இதனால் 5.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், நியூசிலாந்து மற்றும் உகாண்டா ஆகிய இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லும் தகுதியை இழந்துள்ளன. இருப்பினும், இந்த வெற்றி நியூசிலாந்து ரசிகர்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுக்கும்.

இதையும் படிங்க: வெளியேறியது பாகிஸ்தான்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.