ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக், டைமண்ட் லீக் என அடுத்தடுத்து போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இந்தியா கூட திரும்பாத நீரஜ் சோப்ரா, நேரடியாக பயிற்சிக்காக வெளிநாடு சென்றார்.
தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் கலந்து கொண்டார். அதன்பின் ஈட்டி எறிதல் தொடர்பான பயிற்சியை மேற்கொள்ள அங்கேயே செட்டிலான நீரஜ் சோப்ரா தொடர் பயிற்சி மற்றும்ம் பிஸியோ சார்ந்த சிகிச்சைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஐரோபிய மாஸ்டர்ஸ் கோல் விளையாட்டு தொடரில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு உள்ளார்.
ஐரோப்பிய கோல்ப் மாஸ்டர்ஸ் விளையாட்டு தொடரில் கலந்து கொண்டது குறித்து நீரஜ் சோப்ரா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் வெள்ளை நிற சட்டையுடன் சாக்லேட் பாய் தோற்றில் நீரஜ் சோப்ரா தோன்றுகிறார். அவரது ரசிகர்கள் புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
மேலும், அந்த பதிவில் நீரஜ் சோப்ரா, "சுவிட்சர்லாந்தின் கிரன்ஸ் மான்டனாவில் நடைபெற்ற ஐரோப்பிய மாஸ்டர்ஸ் கோல்ப் விளையாட்டு தொடரில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோல்ப் விளையாட்டு தொடருக்கு அழைத்ததுக்கு மிகவம் நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பாரீஸ் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தது மட்டுமின்றி தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார்.
தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள லொசன்னேவில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் விளையாடிய நீரஜ் சோப்ரா அங்கும் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு பின் இந்தியா திரும்பாத நீரஜ் சோப்ரா விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: US Open 2024: சாம்பியன் ஜன்னிக் சின்னரின் பெற்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? - Jannik Sinner