ETV Bharat / sports

துலிப் கோப்பையில் இருந்து ஜடேஜா, சிராஜ் விலகல்! என்ன காரணம்? - Duleep Trophy Cricket 2024

துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகி உள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோரும் விலகினர்.

Etv Bharat
Ravindra Jadeja (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 27, 2024, 4:40 PM IST

ஐதராபாத்: துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பி அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் விலகி உள்ளனர். அதேபோல் இந்தியா சி அணியில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கும் அணியில் இருந்து விலகி உள்ளார்.

முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் உடல் நலக் குறைவு காரணமாக துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரவீந்திர ஜடேஜா விலகலுக்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கு பதிலாக நவதீப் சைனி மற்றும் கவுரவ் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக களமிறங்கும் வீரர் குறித்த அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிடவில்லை. மற்ற வீரர்கள் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் வழக்கம் போல் கலந்து கொள்கின்றனர். அடுத்தடுத்து இந்திய அணி வங்கதேசம், ஆஸ்திரேலியா, அடுத்த ஆண்டு இங்கிலாந்து என தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

அடுத்தடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு பயிற்சிக் களமாக துலிக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். வரும் செப்டம் 5ஆம் தேதி துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. அனந்தபூர், ஆந்திர பிரதேசம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிக்கான வீரர்கள் பட்டியல்:

இந்தியா ஏ: அணி: சுப்மன் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கே.எல் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோடியான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா , குமார் குஷாக்ரா, ஷஸ்வத் ராவத்.

இந்தியா பி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்).

இந்தியா C: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிதார், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், கௌரவ் யாதவ், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே (விக்கெட் கீப்பர்), சந்தீப் வாரியர்.

இந்தியா டி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), சௌரப் குமார்.

இதையும் படிங்க: சென்னையில் ஜஸ்பிரித் பும்ரா! கல்லூரி விழாவில் உற்சாகம்! வீடியோ வைரல்! - Jasprit Bumrah in chennai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.