பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் நடைபெற்ற T63 ஆடவர்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். 1.85 மீட்டர் உயரத்தை தாண்டி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதன் மூலம் இவர் பாராலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்ற சாதனை வீரராக உருவெடுத்துள்ளார். முன்னதாக, 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தட்டியிருந்தார்.
#ParaAthletics: Men's High Jump T63 Final
— SAI Media (@Media_SAI) September 3, 2024
2-time Paralympic medallist Mariyappan Thangavelu bags a #Bronze with a leap of 1.85m (T42 category)
Let’s hear it for our champions, let's #Cheer4Bharat🇮🇳
Tune in to DD Sports and Jio Cinema to keep streaming the #Paralympics2024 on… pic.twitter.com/BhU0F7wV4x
அதேபோல், 1.88 மீட்டர் உயரம் தாண்டி இந்தியாவின் சரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும், அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்।#Paralympics2024 pic.twitter.com/IhMylYwNf1
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மூன்றாவது முறையாக பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனைகள் பதக்க வேட்டை!