ETV Bharat / sports

கொல்கத்தாவுக்கு 162 ரன்கள் இலக்கு! அதிரடியாக விளையாடிய பூரன்! யாருக்கு வெற்றி வாய்ப்பு? - IPL 2024 KKRvs LSG Match Highlights

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயித்து உள்ளத்

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 5:24 PM IST

கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.14) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 28வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் இன்னிங்சை குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல் ராகுல் ஆகியோர் தொடங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக் இந்த முறை 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹூடாவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஹூடா 8 ரன்கள் மட்டும் சேர்த்து ரமன்தீன் சிங்கிடம் கேட்ச்சாகி வெளியேறினார். இதனிடையே சிறிது நேரம் விளையாடிய கேப்டன் கே.எல் ராகுல் 39 ரன்கள் மட்டும் சேர்த்து ஆந்திரே ரஸ்செல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 29 ரன், அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 10 ரன் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். கடைசி கட்டத்தில் களமிறங்கிய நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்.

சீரான இடைவெளியில் சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசிய நிகோலஸ் பூரன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் நிகோலஸ் பூரன் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.

க்ருணால் பாண்டியா 7 ரன்களும், அர்ஷத் கான் 5 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர். கொல்கத்தா அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயித்து உள்ளது. இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடுகிறது.

இதையும் படிங்க : KKR Vs LSG: டாஸ் வென்று கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு! - IPL 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.