ETV Bharat / sports

காதல் கிசுகிசுக்களில் சிக்கி வாழ்க்கையை இழந்த கிரிக்கெட் வீரர்கள்! யாரார் தெரியுமா? - Indian Cricketers Love affairs - INDIAN CRICKETERS LOVE AFFAIRS

காதல் கிசுகிசுக்களால் சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்...

Etv Bharat
Indian Cricketers love Affairs (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 26, 2024, 4:19 PM IST

ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணியில் தங்களுக்கான இடத்தை உருவாக்கி சிறப்பாகி விளையாடி வரும் போது, காதல் கிசுகிசுக்களில் சிக்கி தங்களது கரியரை தேவையின்றி இழக்கின்றனர். அப்படி இந்திய அணியின் உச்சியில் இருந்த 7 வீரர்கள் காதல் கிசுகிசுக்கள் மற்றும் மண முறிவில் சிக்கி சின்னாபின்னமானது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

முகமது அசாருதீன்: முன்னாள் இந்திய வீரர் முகமது அசாருதீன் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கினார். அந்நாட்களில் அவரது காதல் விவகாரங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. கிரிக்கெட்டுக்கு மத்தியில் இரண்டு திருமணங்களை செய்து கொண்ட போதிலும் அவை இரண்டுமே அசாருதீனுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. நவ்ரீன் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்ட அசாருதீன் அவர் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

Mohammed Azarudin
Mohammed Azarudin (IANS Photo)

இதனிடையே பாலிவுட் வீராங்கனை சங்கீதா பில்ஜனியுடன், அசாருதீனை இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளி வந்தன. பின்னர் 1996 ஆம் ஆண்டு நவ்ரீனை விட்டு பிரிந்த அசாருதீன், சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இதில் சன்கீதா பாலிவுட் நடிகர் சல்மான் கானை திருமணம் செய்ய இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மேட்ச் பிக்சிங்கில் சிக்கி அசாருதீன் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமானது.

தினேஷ் கார்த்திக்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் கதை ஊர் அறிந்தது. தன் சக நண்பரால் தினேஷ் கார்த்திக் ஏமாற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. தினேஷ் கார்த்திக்கின் முதல் மனைவி நிகிதா மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜயுடன் நெருக்கமாக பழகியதாக செய்திகள் வெளி வந்தன.

Dinesh Karthik
Dinesh Karthik (IANS Photo)

அதன் பின் தினேஷ் கார்த்திக் - நிகிதா தம்பதி பிரிந்தனர். தொடர்ந்து நீண்ட நாட்கள் மன அழுத்தத்தில் இருந்து தினேஷ் கார்த்திக் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். மேலும் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை திருமணம் செய்து கொண்டார் தினேஷ் கார்த்திக்.

முகமது ஷமி: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் காதல் விவகாரம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. கொல்கத்தாவை சேர்ந்த மாடல் மற்றும் நடிகை ஹசின் ஜஹானை கடந்த 2014ஆம் ஆண்டு முகமது ஷமி திருமணம் செய்து கொண்டார். ஹசின் ஜஹான் அவர் மீது குடும்ப வன்முறை, கற்பழிப்பு மற்றும் பிற பெண்களுடன் உறவு வைத்தல் ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகளுடன் வழக்குப் பதிவு செய்தார்.

Mohammed Shami
Mohammed Shami (IANS Photo)

இதனிடையே முகமது ஷமி 2015ஆம் ஆண்டு தந்தையானார். ஆனால் இப்போது அவரது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் அவர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். தற்போது முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சாமியா மிர்சா மற்றும் சில நடிகைகளுடன் இணைந்து முகமது ஷமியின் பெயர் கிசுகிசுக்கப்பட்டது.

வினோத் காம்பிளி: இந்திய அணியின் சீனியர் வீரரும் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் நண்பருமான வினோத் காம்பிளியின் காதல் வாழ்க்கையிலும் பல்வேறு கிசுகிசுக்கள் புயலாய் வீசின. 1998 ஆம் ஆண்டு நொயலா லீவிஸ் என்பவரை வினோத் காம்பிளி திருமணம் செய்து கொண்டார். இதனிடையே மாடல் அழகி ஆண்டிரியா ஹெவிட் என்பவரும் வினோத் காம்பிளிக்கு தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் தீயாய் பரவின.

Vinod Kambli
Vinod Kambli (IANS Photo)

இதையடுத்து முதல் மனைவியை விவாகரத்து செய்த வினோத் காம்பிளி மாடல் அழகி ஆண்ட்ரியா ஹெவிட்டை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது வினோத் காம்பிளி உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்.

சவுரவ் கங்குலி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 1997ஆம் ஆண்டு தோனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தை எதிர்த்து தோனாவை கங்குலி திருமணம் செய்து கொண்டார். இதனிடையே நடிகை நக்மாவுடன், கங்குலிக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் காட்டுத் தீயாய் பரவின.

இதை அறிந்து தோனா சவுரவ் கங்குலியுடன் விவகாரத்து கோரினா. ஆனால் விவாகரத்து தர கங்குலி மறுத்துவிட்டார். இது அப்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின் நடிகை நக்மாவுடனான கங்குலியின் உறவு அனைத்தும் வதந்திகள் என தோனா பொது வெளியில் அறிவித்து இதற்கு முடிவு கட்டினார்.

ஜவஹல் ஸ்ரீநாத்: இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத், 1999ஆம் ஆண்டு ஜோத்ஸ்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் பெண் பத்திரிகையாளர் மாதவி பத்ரவளி என்பவருடன் ஜவஹல் ஸ்ரீநாத்துக்கு காதல் ஏற்பட்டதாக பரவியது. இதையடுத்து மனைவியை விவாகரத்து செய்த ஜவஹல் ஸ்ரீநாத் 2008ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் மாதவியை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஐசிசி நடத்தும் கிரிக்கெட் போட்டிகளில் அவர் அம்பயராக பணியாற்றி வருகிறார்.

Javagal Srinath
Javagal Srinath (IANS Photo)

ஹர்த்திக் பாண்ட்யா: அனைவரும் அறிந்து கதை தான் ஹர்த்திக் பாண்ட்யா - நடாஷா தம்பதி காதல் முறிவு. அண்மையில் பாலிவுட் நடிகை நடாஷாவுடனான திருமண பந்தத்தை ஹர்த்திக் பாண்ட்யா முறித்துக் கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். ஹர்த்திக் பாண்ட்யாவின் குணாதிசியங்கள் பிடிக்காமல் விவகாரத்து பெற்றதாக நடாஷா தரப்பில் தகவல் வெளியானது.

இதனிடையே கிரீஸில் ஓய்வை கழித்து வரும் ஹர்த்திக் பாண்ட்யா பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மீன் வலியாவுடன் இணைந்து ஊர் சுற்றுவதாக தகவல் பரவி வருகிறது.

Hardik Pandya
Hardik Pandya (IANS Photo)

இதையும் படிங்க: செல்பி எடுத்தது குத்தமா? தென் கொரிய வீரர்களுடன் போட்டோ எடுத்த வடகொரிய வீரர்களுக்கு தண்டனை? - North Korea Players Punished

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.