ETV Bharat / sports

ரஞ்சி கிரிக்கெட்: மத்திய பிரதேச வீரர் சாதனை! 89 வருட ரஞ்சி வரலாற்றில் 3வது வீரர்! அப்படி என்ன சாதனை தெரியுமா? - ரஞ்சி டிராபி

Kulwant Khejroliya: இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மத்திய பிரதேசம் - பரோடா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச அணியின் பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா 4 பந்துகளில் தொடர்ச்சியாக 4 விக்கெட்களை வீழ்த்தி 89 ரஞ்சி டிராபி வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 10:39 PM IST

இந்தூர்: ரஞ்சி டிராபி 2023 - 2024 ஆண்டுக்கான போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ரஞ்சி டிராபி போட்டியில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

இந்த நிலையில், அட்டவனைப்படி கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற போட்டிகளில் ஒரு பகுதியாக டி பிரிவில் உள்ள மத்திய பிரதேசம் - பரோடா அணிகளும் மோதி கொண்டன. ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் மத்திய பிரதேச அணி பேட்டிங் செய்தது.

தனது முதல் இன்னிங்ஸில் மத்திய பிரதேச அணி 129.3 ஓவர்கள் முடிவில் 454 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹிமான்ஷு மந்திரி 111 ரன்களும், சரண்ஷ் ஜெயின் 70 ரன்களும் எடுத்தனர். ஆனால் அதன்பின் களம் இறங்கி விளையாடிய பரோடா அணி 132 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. மிதேஷ் படேல் 80 ரன்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 322 ரன்கள் பின்னிதங்கிய நிலையில் பரோடா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இருப்பினும் பரோடா அணியால் பெரிதாக சோபிக்கவில்லை. 270 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மத்திய பிரதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மத்திய பிரதேச அணி சார்பாக குல்வந்த் கெஜ்ரோலியா முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும் எடுத்து அசத்தினார். குறிப்பாக இவர் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை குல்வந்த் கெஜ்ரோலியா பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக 1988ல் இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக டெல்லியை சேர்ந்த ஷங்கர் சைனியும், 2018ல் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முகமது முதாசிர் என்பரும் இந்த சாதனையை செய்திருந்தனர். தற்போது இவர்கள் வரிசையில் குல்வந்த் கெஜ்ரோலியா இணைந்துள்ளார்.

அதேபோல் மத்திய பிரதேச அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்களை கைப்பற்றிய முன்றாவது வீரர் என்ற சாதனையையும் குல்வந்த் கெஜ்ரோலியா நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி கோப்பையில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்

  • ஷங்கர் சைனி (டெல்லி vs ஹிமாச்சல பிரதேசம்) - 1988
  • முகமது முதாசிர் (ஜம்மு & காஷ்மீர் vs ராஜஸ்தான்) - 2018
  • குல்வந்த் கெஜ்ரோலியா (மத்திய பிரதேசம் vs பரோடா) - 2024

மத்திய பிரதேசத்துக்காக ரஞ்சிக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள்

  • ஹிராலால் கெய்க்வாட் (மத்திய பிரதேசம் vs ராஜஸ்தான்) - 1962/63 சீசன்
  • ரவி யாதவ் (மத்தியப் பிரதேசம் vs உத்தரப் பிரதேசம்) - 2019/20 சீசன்
  • குல்வந்த் கெஜ்ரோலியா (மத்திய பிரதேசம் vs பரோடா) - 2023/24 சீசன்

இதையும் படிங்க: சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.