ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று (நவ.22) பெர்த் மைதானத்தில் தொடங்கிய நிலையில், டாஸ் வென்று முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி (41 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் (37 ரன்) மட்டுமே ரன் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Innings Break!
— BCCI (@BCCI) November 23, 2024
Australia have been bowled out for 104 runs and #TeamIndia secure a 46-run lead. Captain @Jaspritbumrah93 leads by example taking 5 wickets, while debutant Harshit Rana gets 3 and @mdsirajofficial has 2.
It is time for Lunch on Day 2 and post that the Indian… pic.twitter.com/eryt7KsGKf
அபாரமாக பந்துவீசிய கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹர்சீத் ரானா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தியதை அடுத்து டெஸ்ட் போட்டியில் அவர் 11வது முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்துவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் 11வது முறையாக 5 விக்கெட் வீழ்த்திய பும்ரா பல்வேறு சாதனைகளை உடைத்து இருக்கிறார். அவர் இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா என ஐந்து நாடுகளில் மொத்தமாக 11 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இதில் தென் ஆப்பிரிக்காவில் மூன்று முறையும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தலா இரண்டு முறைகளும் இந்த சாதனையை செய்து இருக்கிறார். இதில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை ஒன்றிணைத்து SENA நாடுகள் என அழைக்கப்படுகிறது.
5⃣-wicket haul! ✅
— BCCI (@BCCI) November 23, 2024
Jasprit Bumrah's 11th in Test cricket 👏 👏
A cracking start to the morning for #TeamIndia on Day 2 👌 👌
Live ▶️ https://t.co/gTqS3UPruo#AUSvIND pic.twitter.com/1YNs653kiX
இதில் ஜஸ்பிரித் பும்ரா சேனா நாடுகளில் மட்டும் ஏழு முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய சாதனை படைத்துள்ளார். சேனா நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய பந்து வீச்சாளர்களில் கபில் தேவுடன் இணைந்து முதல் இடத்தை பும்ரா பகிர்ந்து கொண்டு உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்த நான்கு நாடுகளில் 62 இன்னிங்ஸ்களில் 7 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். தற்போது பும்ரா 51 இன்னிங்ஸ்களில் அவரது சாதனையை சமன் செய்து இருக்கிறார். இந்த பட்டியலில் ஜாகிர் கான் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் ஆறு முறை இந்த நான்கு நாடுகளில் 5 விக்கெட் சாதனைகளை நிகழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: தங்க மங்கை காசிமாவுக்கு வடசென்னையில் உற்சாக வரவேற்பு! ரூ.1 லட்சம் பரிசளிப்பு!