ஜெய்ப்பூர்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 18 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று (ஏப்ரல் 06) தொடரின் 19வது போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.
ராஜஸ்தான் அணி எந்த மாற்றமும் இன்றி கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்த இப்போட்டியிலும் களம் இறங்கி உள்ளது. பெங்களூரு அணியை பொருத்தவரையில் ஒரே ஒரு மாற்றமாக சவுரவ் சவுகானை சேர்த்துள்ளனர். இவர் அனுஜ் ராவதுக்கு பதிலாக களம் இறக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விகீ), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விகீ), சவுரவ் சவுகான், ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.
இதையும் படிங்க: MI Vs DC: மும்பை அணியில் மீண்டும் சூர்யகுமார் யாதவ்! முதல் வெற்றி பெறுமா? - Suryakumar Back MI