ETV Bharat / sports

பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாக்குமா சென்னை? குஜராத் அணியுடன் இன்று மோதல்! - GT VS CSK PREVIEW - GT VS CSK PREVIEW

GT Vs CSK PREVIEW: நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

CSK vs GT கோப்பு புகைப்படம்
CSK vs GT கோப்பு புகைப்படம் (Credit ANI)
author img

By PTI

Published : May 10, 2024, 1:48 PM IST

அகமதாபாத்: 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 58 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக ஒரு அணி கூட இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இதனால் மீதமிருக்கும் 12 லீக் போட்டிகளும் மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெறும் 59வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டியானது தொடங்கப்படவுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 6 வெற்றி 4 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.

இதனால் சென்னை அணி அடுத்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், சுலபமாக பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும். அதேபோல் 2ல் போட்டிகளில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்கு காத்திருக்க வேண்டும். குஜராத் அணியைப் பொறுத்தவரையில், 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

இதனால் மீதமுள்ள 3 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை நினைத்துப் பார்க்க முடியும். எனவே, இன்று நடைபெறும் போட்டி அந்த அணிக்கு வாழ்வா, சாவா போன்றதாகும். இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் குஜராத் மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த முறை நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுத்து பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் குஜராத் அணியும், அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முனைப்பில் சென்னை அணியும் இன்றைய போட்டியில் களம் காண்கிறது. இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இதையும் படிங்க: சிஎஸ்கே உடனான போட்டியில் என்னுடைய சவால் இதுதான்.. அஸ்வின் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.