சென்னை: இந்தியா - வங்கதேசம் நாடுகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இருநாட்டு வீரர்களும் சென்னை வர தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து இந்திய அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா,குல்தீப் யாதவ், யாஷ் தயாள் மற்றும் யசஸ்வி ஜைஸ்வால் ஆகியோர் சென்னைக்கு விமானநிலையம் வந்தனர்.
அதனைத் தொடர்ந்து இரவில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த இந்திய அணியின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், நாளை(செப்.14) மற்றும் நாளை மறுதினம் வங்கதேச அணி வீரர்கள் சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை வந்துள்ள இந்திய வீரர்கள் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். மேலும், இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.