பாரீஸ் (பிரான்ஸ்): பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.
🇮🇳 Result Update: #ParaShooting R2 Women's 10m Air Rifle SH1 Final👇
— SAI Media (@Media_SAI) August 30, 2024
Unstoppable. @AvaniLekhara strikes #Gold🥇with a Paralympic Record 🥳☑️
The #TOPSchemeAthlete also scripted history to become the 1⃣st Indian woman to win 3⃣ medals at the #Paralympics😍🥳
Super proud of… pic.twitter.com/SWE2rRQraQ
இதில் இந்தியாவின் அவானி லேஹரா 249.7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தங்கம் பதக்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால், 228.7 புள்ளிகளுடன் வெண்கல பதக்கம் வென்றார்.
ஒரே போட்டியில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், 2024 பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்தவர் என்ற பெருமையை அவானி லேஹரா பெற்றுள்ளார்.