பாங்காக்: பாங்காக்கில் நேற்று நடைபெற்ற ஆசிய தொடர் ஓட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் கலப்பு இரட்டையர் அணி 4x400 தொடர் ஓட்டத்தில் தேசிய அளவில் சாதனை படைத்தது. முகமது அஜ்மல், ஜோதிகா ஸ்ரீ தண்டி, அமோஜ் ஜெகப், மற்றும் சுபா வெங்கடேசன் அடங்கிய கலப்பு இடட்டையர் அணி 3 நிமிடங்கள் 14:12 விநாடிகளில், இந்த போட்டியில் வெற்றி பெற்றனர்.
முன்னதாக கடந்த வருடம் ஹாங்சோவ் ஆசிய விளையாட்டு போட்டியில் 3:14:24 என்ற மணிக்கணக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினர். இந்த தொடர் ஓட்டத்தில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணி 3:17:00 என இரண்டாம் இடத்திலும், வியட்நாம் 3:18:45 மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான உலக தடகள வரிசையில் 23வது இடத்திலிருந்து முன்னேறி 21வது இடத்தை பிடித்துள்ளது. 15வது அல்லது 16வது இடத்தை பிடிக்க இந்தியா முனைப்பு காட்டியது. இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்தியா தகுதி பெறுவது கடினமானதாக பார்க்கப்படுகிறது.
பகாமாஸில் நடைபெற்ற உலக தடகள 4x400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் 14 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு ஜூன் 30க்குள் 2 அணிகள் தேர்வாக வேண்டும். 14 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில், செக் குடியரசு (3:11:98) மற்றும் இத்தாலி (3:13:56) அணிகள் 15வது மற்றும் 16வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய ஆடவர் மற்றும் மகளிர் 4x400மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர்.
ராஜேஷ் ரமேஷ், ரூபால் சவுத்ரி, அவினாஷ் கிருஷ்ணா, ஜோதிகா ஸ்ரீ தண்டி அடங்கிய அணி 4x400மீ கலப்பு இரட்டையர் அணி ஆட்டத்தில் தோல்வி அடைந்து பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆடவர் 4x400மீ அணியும், பெண்கள் 4x400மீ அணியும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.
இதையும் படிங்க: ஆர்சிபி தகுதிச் சுற்றில் நுழைந்தது எப்படி? பெங்களூரு 'ஹீரோ' யாஷ் தயாள் சிறப்பு பேட்டி! - YASH DAYAL