பெங்களூரு : இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் நேற்று (அக் 17) தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 46 ரன்களுக்கு நியூசிலாந்து அணி சுருட்டியது. அதன்படி, நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியதில், இன்னிங்ஸ் முடிவில் 402 ரன்களை குவித்தது.
Stumps on Day 3 in the 1st #INDvNZ Test!
— BCCI (@BCCI) October 18, 2024
End of a gripping day of Test Cricket 👏👏#TeamIndia move to 231/3 in the 2nd innings, trail by 125 runs.
Scorecard - https://t.co/FS97LlvDjY@IDFCFIRSTBank pic.twitter.com/LgriSv3GkY
இந்நிலையில், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா ஜோடி களமிறங்கியது. முதல் 3 ஓவர்களுக்கு இந்திய அணிக்கு பெரிதாக ரன்கள் இல்லை. 4வது ஓவரில் ரோகித் சர்மா இரு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். பின்னர் அடுத்த 3 ஓவர்களுக்கு ரன்கள் எதும் இல்லை. 10 ஓவர்கள் முடிவிற்கு 33-0 என்ற கணக்கில் விளையாடியது.
இதையும் படிங்க : IND vs NZ 1st Test: ரச்சின், கான்வே அதிரடி ஆட்டம்; முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 402 ரன்கள் குவிப்பு!
ஜெய்ஸ்வால் - ரோகித் கூட்டணியில் இந்தியாவிற்கு 50 ரன்கள் குவிந்தன. இந்நிலையில் அஜாஸ் படேல் வீசிய அபார பந்தில் ஜெய்ஸ்வால் போல்ட் ஆனார். பின்னர் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி களம் கண்டார். 21வது ஓவரில் ஹென்ரி வீசிய பந்தை ரோகித் சர்மா சிக்ஸ், பவுண்டரி என மாறி, மாறி விளாசி நேரத்தில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். களத்தில் விராட் கோலியுடன் சர்பாஸ் கான் கைகோர்க்க இருவரும் பார்ட்னர் போட்டு விளையாடினர். இருவரும் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர்.
An excellent 100-run partnership comes up between Virat Kohli and Sarfaraz Khan!
— BCCI (@BCCI) October 18, 2024
Live - https://t.co/FS97LlvDjY… #INDvNZ@IDFCFIRSTBank pic.twitter.com/XhlLwh2pEs
சர்பாஸ் கான் வில்லியம் வீசிய அபார பந்தினை அசால்டாக பவுண்டரி லைனுக்கு விளாசினார். விராட் கோலியும் அஜாஸ் பந்தில் சிக்ஸ், பவுண்டரி என மாறி, மாறி விளாசினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணிக்கு 100 ரன்கள் குவிந்தன. இதற்கிடையில் இருவருமே தங்களது அரை சதத்தையும் குவித்தனர். இந்நிலையில் ஆட்ட நேர முடிவின் கடைசிப் பந்தில் விராட் கோலி அவுட் ஆனார்.
இன்றைய நாள் முடிவில், இந்திய அணி 231 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியில் அஜாஸ் 2 விக்கெட்டுகளையும், பிலிப்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இந்திய அணியில் விராட் கோலி, சர்பாஸ் கான் ஆகிய இருவரும் 70 ரன்களையும், ரோகித் 52 ரன்களையும் குவித்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 125 ரன்கள் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்