பல்லேகலே: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூலை.28) பல்லேகலேவில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
A 43-run victory in the first T20I! 🙌#TeamIndia take a 1-0 lead in the series 👏👏
— BCCI (@BCCI) July 27, 2024
Scorecard ▶️ https://t.co/Ccm4ubmWnj #SLvIND pic.twitter.com/zZ9b1TocAf
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (40 ரன்), சுப்மன் கில் (34 ரன்) நல்ல தொடக்க அமைத்து கொடுத்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். அவருக்கு உறுதுணையாக ரிஷப் பன்ட் 49 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர்கள் 4 பேரும் 30 ரன்களுக்கு மேல் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்தது.
இலங்கை தரப்பில் மதீஷ பத்திரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து சற்று கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடக்க விக்கெட்டுக்கு பதுன் நிஷங்கா மற்றும் விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் 84 ரன்கள் சேர்த்தனர்.
அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் குசல் மெண்ட்ஸ் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய இலங்கை வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அணிவகுப்பு நடத்தினர். மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் பதுன் நிஷங்கா மட்டும் போராடிக் கொண்டு இருந்தார்.
For leading from the front with the bat, #TeamIndia Captain Suryakumar Yadav becomes the Player of the Match 🏆👏
— BCCI (@BCCI) July 27, 2024
Scorecard ▶️ https://t.co/Ccm4ubmWnj… #SLvIND | @surya_14kumar pic.twitter.com/s2LGOFsrsw
இறுதியில் நிஷங்காவும் 79 ரன்கள் குவித்து இருந்த நிலையில் அக்சர் பட்டேல் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். அதன் பின் ஆட்டம் மெல்ல இந்திய அணியின் கட்டுக்குள் வந்தது. இலங்கை வீரர்கள் சொற்ப ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினர். 19 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் ரியன் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ரவி பிஷ்னோய் ஆகியோ தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.28) இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இதே பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்! - badmintion mens doubles