தம்புள்ளை: ஆசிய மகளிர் கோப்பைக்கான டி20 போட்டி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நேபாள மகளிர் அணியும், இந்திய மகளிர் அணியும் இன்று (ஜூலை 23) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ஷஃபாலி வர்மா - ஹேமலதா ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரில் ஷாஃபாலி வர்மா இரு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இருவரும் போட்டி போட்டு பவுண்டரிகளை விளாசினர். 5 ஓவர் முடிவிற்கு 48-0 என்ற கணக்கில் இந்திய அணி விளையாடியது. 8வது ஓவரில் ஷாஃபாலி வர்மா தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
For her opening brilliance of 81 off just 48 deliveries, @TheShafaliVerma becomes the Player of the Match 👏👏
— BCCI Women (@BCCIWomen) July 23, 2024
Scorecard ▶️ https://t.co/PeRykFLdTV#Teamindia | #WomensAsiaCup2024 | #ACC | #INDvNEP pic.twitter.com/vrXz9Mhoar
இந்நிலையில் தான் ரானா வீசிய பந்தைச் சமாளிக்க முடியாமல் ஹேமலதா அவுட் ஆனார். ஹேமலதா 42 பந்துகளுக்கு 47 ரன்கள் குவித்தார். அதன்பின் சஞ்சனா களம் கண்டார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஷஃபாலி வர்மா போல்ட் ஆனார். பின்னர் ஜெமிமா களம் கண்டு பவுண்டரிகளை விளாச, இதற்கிடையில் சஞ்சனா எல்பிடபிள்யூ ஆனார். பின்னர், ரிச்சா கோஷ் களம் கண்டார். இந்திய அணிக்கு 20 ஓவரில் 3 பவுண்டரிகள் கிடைத்தன. 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களைக் குவித்தது.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணியில் சம்ஜானா கட்கா - ராணா ஜோடி களமிறங்கியது. வெறும் 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பிச் சென்றார் சம்ஜானா. கபிதா குன்வர் களம் கண்டார். அவரும் வந்த வேகத்தில் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நேபாள மகளிர் அணி திணறியது. அதன்பின், கேப்டன் இந்து பர்மா களம் கண்டார், அவரும் பெரிதாக ரன் எடுக்கவில்லை. அடுத்தடுத்து அணிக்கு விக்கெட்டுகள் சரிந்த 20 ஓவர்கள் முடிவிற்கு 96 ரன்களைக் குவித்தது.
𝙄𝙣𝙩𝙤 𝙩𝙝𝙚 𝙎𝙚𝙢𝙞𝙨!#TeamIndia continue their winning run in #WomensAsiaCup2024 👏👏
— BCCI Women (@BCCIWomen) July 23, 2024
Scorecard ▶️ https://t.co/PeRykFLdTV#ACC | #INDvNEP pic.twitter.com/8Eg77qAJOt
இந்தப் போட்டியில், இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா 81 ரன்களையும், ஹேமலதா 47 ரன்களையும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். நேபாள மகளிர் அணியில் ரானா 18 ரன்களும் பிந்து ராவல் 17 ரன்களும், ரானா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜொலிக்கப்போகும் வித்யா ராம்ராஜ் - சுபா வெங்கடேசன்.. இதுவரை இவர்களின் சாதனைகள் என்ன? - Paris Olympics 2024