சென்னை: 8வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அந்த வகையில், இந்திய அணி லீக் போட்டியில் சீனா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. இதில் நேற்று முன்தினம் (செப்.14) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்புத் தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் ஐந்து வெற்றிகளைப் பெற்று, 15 புள்ளிகள் உடன் முதலிடம் பிடித்து இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது இந்திய ஹாக்கி அணி.
Into The Final! 🥳
— SAI Media (@Media_SAI) September 16, 2024
Kudos👏🏻 to #IndianHockey🏑 team for outclassing South Korea🇰🇷 4-1 and securing their spot in the #AsianHockeyChampionsTrophy Final for the 6⃣th time.
Let's keep the cheers going for our #MenInBlue! 🥳 as they aim to win the 🏆 on Sep 17th. pic.twitter.com/TwVLxlwLvl
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென்கொரியாவை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற இந்த போட்டியில். தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இதையும் படிங்க: அர்ஜுனா விருதுக்குத் தேர்வான லான் பவுல்ஸ் வீராங்கனை..! யார் இந்த பிங்கி சிங்..?
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் அதிகபட்சமாக இரண்டு கோல்களை அடைத்துள்ளார். நடப்பு போட்டியில் ஏற்கெனவே தென் கொரியா அணியை இந்திய அணி வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மீண்டும் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை எதிர் கொள்கிறது.