ETV Bharat / sports

இந்தியாவை வெல்ல வியூகம் வகுக்கும் இலங்கை! 3வது போட்டியில் யாருக்கு வெற்றி? - Ind Vs SL 3rd T20 Cricket

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 3:13 PM IST

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

Etv Bharat
Indian Players (BCCI)

பல்லேகலே: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 2வது டி20 கிரிக்கெட் போடியில் முறையே இந்திய அணி 43 ரன்கள் மற்றும் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஜூலை.30) பல்லேகலே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை 2-க்கு 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் போனசாகும்.

இலங்கை அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அடுத்தடுத்து களமிறங்கும் வீரர்கள் சிறப்பாக விளையாட தவறும் நிலையில் அந்த அணி தோல்வி அடைய காரணமாகிறது. இலங்கை தொடக்க வீரர் பதும் நிசங்கா இரண்டு ஆட்டங்களிலும் 111 ரன்கள் டி20 தொடரில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல் குசல் பெரரா, குசல் மென்டிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேநேரம் இலங்கை அணியில் பந்துவீச்சும் பெரிய அளவில் எடுபடவில்லை. மதீச பத்திரனா தவிர்த்து மற்ற வீரர்கள் சற்று திணறுகின்றனர். டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆவதை தவிர்க்க இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் இலங்கை அணி சிறப்பாக செயல்படும்.

அதேபோல், இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் இரண்டு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணியில் பின்வரிசை வீரர்களுக்கு தான் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 6 மற்றும் 7 வரிசையில் களமிறங்கி அணியை வழிநடத்துச் செல்வதில் வீரர்களிடையே குழப்பம் நிலவுகிறது.

ரியன் பரக் மற்றும் ரிங்கு சிங் அந்த வரிசையில் சிறந்த தேர்வாக இருக்கக் கூடும். ரிஷப் பன்ட்டும் சிறப்பாக விளையாடி வருகிறார். காயத்தில் இருந்து பூரண குணமடைந்து உள்ள ரிஷப் பன்ட் நல்ல பார்மில் உள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ் போராடுகிறார். ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக உள்ளது.

பல்லேகலே மைதான பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடிய மைதானம் ஆகும். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் மைதானம் நன்கு பேட்டிங்குக்கு ஒத்துழைப்பு கொடுத்தது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று இந்திய அணி 20 தொடரை 3-க்கும் 0 என்ற கணக்கில் கைப்பற்றும் ஆவலுடன் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் மனு பாகெர் - சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்று சாதனை! - Paris Olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.