பெங்களூரு: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூரூவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2வது நாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. பங்களதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி, இந்த போட்டியையும் மிகுந்த நம்பிக்கையுடன் துவங்கியது.
மோசமான சாதனை: ஆனால் இந்திய அணிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுக்கு அவுட்டாக, விராட் கோலி, சர்பராஸ்கான் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
That will be Stumps on Day 2 of the 1st #INDvNZ Test!
— BCCI (@BCCI) October 17, 2024
New Zealand move to 180/3 in the first innings, lead by 134 runs.
See you tomorrow for Day 3 action.
Scorecard - https://t.co/FS97LlvDjY#TeamIndia | @IDFCFIRSTBank pic.twitter.com/ZvoDdxdb0O
இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால்,ரிஷப் பண்ட் ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் ரிஷப் 20 ரன்களுக்கு விக்கெட் இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றன் அளித்தனர்.
இதனால் 31.2 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. இதில் ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் தவிர யாரும் ஒற்றை இலக்கை ரன்களை தாண்டவில்லை. இதில் 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மாட் ஹென்றி ஐந்து விக்கெட்டும் வில்லியம் ஓ ரூர்க்கி நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
134 ரன்கள் முன்னிலை: இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து அணி. இதில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 91 ரன்ள் எடுத்து இருந்திருந்தபோது அஸ்வின் வீசிய பந்தில் விக்கெட் இழந்து சதத்தைத் தவறவிட்டார்.
2வது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அந்த அணியில் ரவிந்திரா (22*) மற்றும் டேரன் மிட்செல் (14*) ஆகியோர் களத்தில் உள்ளனர்.இந்திய அணி தரப்பில் குல்தீல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.