பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் ஹாக்கி போட்டியின் கால் இறுதியில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி பெனால்டி ஷூட் வாய்ப்பில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியது.
SREEJESH THE WALL STANDS TALL! 💪
— SAI Media (@Media_SAI) August 4, 2024
The #MenInBlue defeat Great Britain after an epic 4-2 shoot-out win in an exciting 🤯 Men’s #Hockey Quarter-final match at the #Paris2024Olympics. 🏑#TeamIndia ended the match in normal time with the scores tied at 1-1 but played brilliantly… pic.twitter.com/dlW4ETRfY1
ஆடவர் ஹாக்கியில் கால் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போடாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து இரண்டாவது 15 நிமிடங்களில் கோல் அடிக்க இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்களும் கடுமையாக போராடினர்.
இதில், ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அசத்தலாக கோல் அடித்தார். இந்நிலையில் அடுத்த சில நிமிடங்களில் கிரேட் பிரிட்டன் வீரர் பதில் கோல் திருப்பினார். ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் கிரேட் பிரிட்டன் வீரர் லீ மோர்டன் பதில் கோல் திருப்பினார்.
🇮🇳🔥 𝗪𝗛𝗔𝗧 𝗔 𝗪𝗜𝗡! The Indian men's hockey team secured a fantastic victory in a shoot-out thriller to book their place in the semi-final and move one step closer to Olympic glory.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) August 4, 2024
🏑 A red card for Amit Rohidas in the second quarter threatened to change the momentum of… pic.twitter.com/u0sTZ8Dket
இதனால் போட்டி சமன் ஆனது. போட்டியில் தொடர்ந்து முன்னிலை பெற இந்திய வீரர்கள் கடுமையாக போராடினார். அதேபோல் பதில் கோல் போட்டு ஆட்டத்தை கைப்பற்ற கிரேட் பிரிட்டன் வீரர்களும் கடும் போராட்டித்தில் ஈடுபட்டனர். இருப்பினும் சிறப்பான தடுப்பாட்டத்தால் இரு அணி வீரர்களாலும் பதில் கோல் திருப்ப முடியவில்லை.
Men's Hockey Quarter-finals
— SAI Media (@Media_SAI) August 4, 2024
The #MenInBlue break for half-time, tied 1-1 with Great Britain, after taking the lead through captain fantastic Harmanpreet Singh.#TeamIndia will head to the second half with aim to make consecutive semifinal appearances at the Olympics.
C'mon… pic.twitter.com/vIgi1rNDzh
இறுதியில் போட்டி 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து ஷூட் அவுட் முறை அமல்படுத்தப்பட்டது. அதில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் திருப்பி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஷூட் அவுட்டில் இந்திய அணி 4-க்கு 2 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பாக செயல்பட்டு கிரேட் பிரிட்டன் வீரர்களின் இரண்டு கோல்களை அடுத்தடுத்து தடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதையும் படிங்க: ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு டபுள் டமாக்கா! நீரஜ் சோப்ராவுடன் போட்டி போடும் மற்றொரு இந்திய வீரர்! - Paris Olympics 2024