ETV Bharat / sports

2வது டெஸ்ட்; இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!

IND Vs ENG: விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

Ind Vs Eng Day 3
Ind Vs Eng Day 3
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 7:24 PM IST

Updated : Feb 5, 2024, 3:13 PM IST

விசாகப்பட்டினம்: இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில், நேற்று முன்தினம் (பிப். 2) துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான் அகமது, ஜோரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, பும்ராவின் பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்தது விக்கெட்டுகளை இழந்து, 253 ரன்களுக்கு ஆவுட் ஆனது.

இங்கிலாந்து அணி தரப்பில், ஜேக் கிராலி 76 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோஸ் 47 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது. அணியின் கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களுக்கு வெளியேற, முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 17 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 30 ரன்களுக்குள் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து வந்த சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருக்க, மறுபுறம் ஆட வந்த ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்தில் 29 ரன்களுக்கு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, அக்சர் படேல்-சுப்மன் கில் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் சதம் விளாசினார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய அக்சர் படேல் 45 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால், 255 ரன்களுக்கு இந்தியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் டாம் ஹார்ட்லி 4 விக்கெட், ரெஹான் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது, இந்திய அணி. இதனையடுத்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3-வது நாள் ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்துள்ளது. ஜாக் கிராலி 29 ரன்களுடனும், ரெஹான் அகமது 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 332 ரன்கள் தேவை. அதேபோல், இந்திய அணி வெற்றி பெற 9 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இது போன்ற பரபரப்பான சூழலில், நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: டேவிஸ் கோப்பை டென்னிஸ்; பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த இந்தியா!

Last Updated : Feb 5, 2024, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.