ராஞ்சி: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று(பிப்.23) ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில் (JSCA International Stadium Complex) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
முன்னதாக, ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி, 1 - 1 என்ற கணக்கில் இருந்தது.
பின்னர், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 4வது டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்று தொடரைக் தக்க வைக்குமா அல்லது நழுவ விடுமா என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி: ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அக்சர் பட்டேல், ஸ்ரீகர் பாரத், வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல், ஆகாஷ் தீப்
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன், ஜாக் கிராலி, சோயப் பஷீர், ஜாக் லீச், டேனியல் லாரன்ஸ், கஸ் அட்கின்சன்
இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து முகமது ஷமி விலகல்? - என்ன காரணம்?