சென்னை: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (19.09.2024) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்ததால், இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நீதானமாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் சென்சுரி அடித்தார். பின்னர் 113 ரன்களில் அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜா 86, ரிஷப் பண்ட் 36, கே.எல்.ராகுல் 16 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தனர்.
இதையும் படிங்க: IND vs BAN: சொந்த மண்ணில் சதம் விளாசிய அஸ்வின்.. முதல் டெஸ்ட் போட்டியில் சம்பவம் செய்த இந்திய அணி!
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாவது நாளில் 10 விக்கெட்டுகளையும் இழந்து. 376 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.
வங்கதேச அணியின் அசன் முகமது 83 ரன்களை மட்டுமே கொடுத்து ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய மண்ணில் ஒரே இன்னிங்ஸில் 5 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
What a sight for a fast bowler!
— BCCI (@BCCI) September 20, 2024
Akash Deep rattles stumps twice, giving #TeamIndia a great start into the second innings.
Watch the two wickets here 👇👇#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/TR8VznWlKU
அடுத்ததாக களமிறங்கிய வங்கதேச அணி 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.