பெனானி: ஐசிசி சார்பில் U19 உலகக்கோப்பை ஆடவர் கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. அதன்படி, இன்று மதியம் 1.30 மணி அளவில் பெனானியில் இறுதி ஆட்டம் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஷ்வின், தனது யூடியூப் சேனலில் ஜூனியர் அணி கேப்டன் உதய் சஹாரன்ஸ் பற்றி பதிவு செய்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது. "உதய்யை அனைவரும் 'ஃபைண்ட் ஆஃப் தி டோர்னமெண்ட்' என்றுதான் அழைக்கின்றனர். சீனியர் அணிக்கு சிறந்த ஃபினிஷராக செயல்படுவார்.
இந்த போட்டியில் இந்திய அணியில் அதிக ரன்களை எடுத்த முதல் கேப்டன். இது ரன்களைப் பற்றியது அல்ல, போட்டியைப் பற்றியது. உதய் சஹாரனின் வெற்றித் திறன் என்னை கவர்ந்ததற்கு காரணம், அவருடைய நிதானம்தான். உதய் சஹாரன் மிகவும் உறுதியாக இருக்கிறான் எனவும், அமைதியாகவும், தன்னம்பிக்கை உடையவனாக திகழ்கிறான் எனக் கூறினார்.
ஜூனியர் உலகக்கோப்பையில், மொத்தம் 389 ரன்கள் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்களை விளாசி அதிக ரன்களை குவித்துள்ளார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், உதய் 81 ரன்கள் எடுத்ததால்தான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அந்த போட்டியில் 32/4 என்று தடுமாறிய நிலையில் சச்சின் தாஸ் உடனான பாட்னர்ஷிப்தான் இந்திய அணியை 245 ரன்கள் இலக்கை நோக்கி அழைத்துச் சென்றது. நேபாளத்திற்கு எதிரான இந்தியாவின் சூப்பர் சிக்ஸ் போட்டியிலும் அவர் சதம் அடித்தார். போட்டியின்போது சந்தித்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றி அமைக்கும் திறன் கொண்டவர்" என தெரிவித்துள்ளார்.
இந்திய அணி: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன், பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ், முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, நமன் திவாரி, செளமி பாண்டே, ஆராத்யா சுக்லா, அன்ஷ் கோஸ்சை கவுடா, ருத்ரா படேல், பிரேம் தேவ்கர், முகமது அமான், இன்னேஷ் மகாஜன்
ஆஸ்திரேலிய அணி: ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென், ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ், ஆலிவர் பீக், சார்லி ஆண்டர்சன், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், காலம் விட்லர், லாச்லன் ஐட்கன், ஹர்கிரத் பஜ்வா, கோரி வாஸ்லி, எய்டன் ஓ கானர், டாம் காம்ப்பெல்
இதையும் படிங்க: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்; மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகல்!