பாரீஸ்: 33வது ஓலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா - அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
BIG UPDATE: Fighting India draw against Rio Olympic Champions Argentina 1-1 in their 2nd group stage Hockey match.
— India_AllSports (@India_AllSports) July 29, 2024
India scored the equalizing goal with a PC by Harmanpreet with just 2 mins left in the match. #Hockey #Paris2024 #Paris2024withIAS pic.twitter.com/2K3wq3P7ga
ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, அர்ஜென்டினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இருப்பினும் அர்ஜென்டினா அணியின் லுகாஸ் மார்டின்ஸ் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கோல் அடித்து அந்த அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதனால் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
தொடர்ந்து கோல் அடிக்க எடுத்த இந்திய வீரர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய வீரர்களால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இதனால் தோல்வியின் விளிம்பிற்கு செல்லும் நிலைக்கு இந்திய அணி சென்றது. பெனால்டி வாய்ப்பு உள்பட இந்தியாவுக்கு கிடைத்த 10 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
The #MenInBlue stage a dramatic late come-back in their second Men's Hockey Group Stage match at the #Paris2024Olympics and secure a 1-1 draw against Argentina.
— SAI Media (@Media_SAI) July 29, 2024
India will play Ireland on July 30. pic.twitter.com/OkpQmPBpGm
ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜித் பிரம்மாண்டமாக கோல் அடிக்க முயன்றார். ஆனால் அதை அர்ஜென்டினா கோல் கீப்பர் லாவகமாக தட்டி பறித்தார். அதேபோல், ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கார்னர் மூலம் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி அர்ஜென்டினாவின் பெனால்டி வாய்ப்பை தடுத்தனர்.
இறுதியாக ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அதிரடியாக கோல் அடித்து அணிக்கு ஊக்கம் அளித்தார். இந்திய அணியின் கோலை எதிர்த்து அர்ஜென்டினா வீரர்கள் முறையீடு செய்தும் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டம் 1-க்கு 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இறுதியில் இந்தியா - அர்ஜென்டினா அணிகள் இடையிலான ஆட்டம் வெற்றி, தோல்வியின்றி சமனில் முடிந்தது.
இதையும் படிங்க: 2025 ஆசிய கோப்பை நடத்தும் இந்தியா! பாகிஸ்தான் கலந்து கொள்வதில் சிக்கலா? - Asia Cup Cricket 2025