ஐதராபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி சறுக்கலை எதிர்கொண்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை அடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு இறங்கி உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் 7 போட்டிகளில் விளையாட வேண்டி உள்ளது.
Australia on top of the WTC 2023-25 table pic.twitter.com/DGcaaVySNk
— ABHIJIT NAIR 🏏🇦🇺 (@Rahul_bill) November 3, 2024
அதேநேரம் இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அதேநேரம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து அணி மீண்டும் 4வது இடத்திற்கு முன்னேறியது.
கடந்த வாரம் வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்திடம் இருந்து 4வது இடத்தை கைப்பற்றி இருந்தது. தற்போது இந்திய தொடரை கைப்பற்றிய நிலையில் நியூசிலாந்து மீண்டும் 4வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரில் குறைந்தபட்சம் 4 போடிகளை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.
India slip from the top of the #WTC25 standings following a 3-0 loss to New Zealand at home 📉#INDvNZ | Full details 👇https://t.co/Q7AWgO75Fv
— ICC (@ICC) November 3, 2024
3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக வில் யங் 71 ரன்களும், டேரி மிட்செல் 82 ரன்களும் குவித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 263 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எதிர்நோக்கி விளையாடிய போதும் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
New Zealand wrap up a remarkable Test series with a 3-0 whitewash over India following a thrilling win in Mumbai 👏 #WTC25 | 📝 #INDvNZ: https://t.co/XMfjP9Wm9s pic.twitter.com/vV9OwFnObv
— ICC (@ICC) November 3, 2024
டாப் வீரர்கள் ரோகித் சர்மா (11 ரன்), விராட் கோலி (1 ரன்), சுப்மன் கில் (1 ரன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (5 ரன்), சர்பரஸ் கான் (1 ரன்) ஆகியோர் அவசரதியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்திய அணியின் வெற்றிக்காக நீண்ட நேரம் போராடிய ரிஷப் பன்ட்டும் (64 ரன்) ஏமாற்றம் அளிக்க இறுதியில் சரணாகதி அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
121 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஏறத்தாழ 92 ஆண்டுகளில் இந்தியா கண்ட மோசமான டெஸ்ட் தோல்விகளில் இதுவும் ஒன்று.
இதையும் படிங்க: இந்தியா ஏ வீரர்கள் பந்தை சேதப்படுத்தினரா? இஷான் கிஷனுக்கு தடையா? ஆஸ்திரேலியா விளக்கம் என்ன?