ஹைதராபாத்: இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது.
-
Just absolute scenes 😍
— England Cricket (@englandcricket) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
🇮🇳 #INDvENG 🏴 | #EnglandCricket pic.twitter.com/qamsNLn96z
">Just absolute scenes 😍
— England Cricket (@englandcricket) January 28, 2024
🇮🇳 #INDvENG 🏴 | #EnglandCricket pic.twitter.com/qamsNLn96zJust absolute scenes 😍
— England Cricket (@englandcricket) January 28, 2024
🇮🇳 #INDvENG 🏴 | #EnglandCricket pic.twitter.com/qamsNLn96z
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் 80 ரன், கே.எல்.ராகுல் 86 ரன் மற்றும் ஜடேஜா 87 ரன்கள் குவித்தனர். பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
-
GET IN! 🦁 🏴 This team ❤️
— England Cricket (@englandcricket) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
One of our greatest ever wins 🙌
From a 190-run deficit, to victory!
Match Centre: https://t.co/s4XwqqpNlL pic.twitter.com/45dw0Qiori
">GET IN! 🦁 🏴 This team ❤️
— England Cricket (@englandcricket) January 28, 2024
One of our greatest ever wins 🙌
From a 190-run deficit, to victory!
Match Centre: https://t.co/s4XwqqpNlL pic.twitter.com/45dw0QioriGET IN! 🦁 🏴 This team ❤️
— England Cricket (@englandcricket) January 28, 2024
One of our greatest ever wins 🙌
From a 190-run deficit, to victory!
Match Centre: https://t.co/s4XwqqpNlL pic.twitter.com/45dw0Qiori
அதன்பின் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 2 ரன், ஜானி பேர்ஸ்டோவ் 10 ரன், பென் ஸ்டோக்ஸ் 6 ரன், பென் ஃபோக்ஸ் 34 ரன்கள் என ஆட்டமிழக்க, மறுபுறம் இருந்த ஓல்லி போப் சிறப்பாக விளையாடி 196 ரன்களை குவித்தார். இதன் காரணமாக 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 416 ரன்களை குவித்தது.
இதனால் இந்திய அணி வெற்றி பெற 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 42 ரன்கள சேர்த்து பிரிந்தது. ஜெய்ஸ்வால் 15 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதனை தொடர்ந்து வேகமாக வந்த சுப்மன் கில், வந்த வேகத்தில் ரன்கள் எதும் எடுக்கமல் பெவிலியன் திரும்பினார். பின்னர் ரோகித் சர்மா 39 ரன்களிலும், அக்சர் படேல் 17 ரன்களிலும், கேஎல் ராகுல் 22 ரன்களிலும், ஜடேஜா 2 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனையடுத்து 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா. இதன் மூலம் 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. மேலும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று போட்டியில் தோல்வி பெறுவது இந்திய அணிக்கு இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து வீரர் டாம் ஹார்லி தனது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
-
9⃣ wickets on Test debut in India to guide us to a historic win 🙌
— England Cricket (@englandcricket) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
Match Centre: https://t.co/s4XwqqpNlL
🇮🇳 #INDvENG 🏴 | @tomhartley100 pic.twitter.com/eAotVPKUy5
">9⃣ wickets on Test debut in India to guide us to a historic win 🙌
— England Cricket (@englandcricket) January 28, 2024
Match Centre: https://t.co/s4XwqqpNlL
🇮🇳 #INDvENG 🏴 | @tomhartley100 pic.twitter.com/eAotVPKUy59⃣ wickets on Test debut in India to guide us to a historic win 🙌
— England Cricket (@englandcricket) January 28, 2024
Match Centre: https://t.co/s4XwqqpNlL
🇮🇳 #INDvENG 🏴 | @tomhartley100 pic.twitter.com/eAotVPKUy5
இதையும் படிங்க: AUS vs WI 2nd Test Cricket: வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி! 27 ஆண்டுகளுக்கு பின் வெற்றி வாகை சூடியது!