ETV Bharat / sports

உலகக் கோப்பை ஃபைனலுக்கு பழிதீர்க்குமா இந்தியா? - வாழ்வா, சாவா போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்! - T20 WORLD CUP 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 10:45 AM IST

IND vs AUS: செயின்ட் லூசியாவில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது

இந்தியா - ஆஸ்திரேலியா அணி வீரர்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா அணி வீரர்கள் (Credits - AP Photos)

சென்னை: டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை டி20 தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று நடைபெற்று வரும் நிலையில், குரூப் 1இல் அரையிறுதிக்கு முன்னேற இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அதே வேளையில் குரூப் 2இல் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா இடையே போட்டி நிலவுகிறது. இந்தியா அணி சூப்பர் 8 சுற்றில் எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை வென்ற நிலையில், இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததால் இன்று இந்தியாவிற்கு எதிராக கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெற்றது, இந்த உலகக் கோப்பையில் திருப்புமுனையை ஏற்படுத்தி விறுவிறுப்பை கூட்டியுள்ளது. அது மட்டுமின்றி, இன்று இந்தியா அணி தோற்கும் பட்சத்தில் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியை எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியாவிற்கு வாய்ய்பு எப்படி உள்ளது என பார்க்கலாம்

1.இன்றைய போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்கு எந்தவித பிரச்சனையும் இன்றி தகுதி பெறும்.

2.இந்தியா இன்றைய போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானுக்கு இடையிலான போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற வேண்டும்.

3.அதே நேரத்தில் வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானுக்கு இடையிலான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்று ரன் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

அதேபோல் வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக இமாலய வெற்றி பெறும் பட்சத்தில் வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் இன்றைய போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி உலகக் கோப்பை 50 ஓவர் இறுதி போட்டி தோல்விக்கு பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு சமபலம் வாய்ந்த அணிகளுக்கும் வாழ்வா, சாவா போட்டி என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: "ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஆப்கான் மக்களின் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டும்"- லால்சந்த் ராஜ்புத்! - Aus vs Afg T20 World Cup Super 8

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.