சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் தொடர் நாளை (செப் 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் தொடர் வரும் செப் 27ம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இரு அணியினா் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாளை நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கட் விற்பனையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறித்துள்ளது.
Sound 🔛
— BCCI (@BCCI) September 17, 2024
We bring you raw sounds 🔊 from #TeamIndia nets as they gear up for Test Cricket action 😎#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/8SvdTg29J7
இதையும் படிங்க : ind vs ban test: கே.எல்.ராகுலிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்" - கேப்டன் ரோகித் சர்மா சென்னையில் பேட்டி! - IND VS BAN 1st Test series 2024
அதில், "முதல் டெஸ்ட் போட்டியானது செப் 19 - 23 வரை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டிக்கெட் நாளை காலை 7 மணி முதல் வழங்கப்படுகிறது. அதில், FGH upper standக்கு டிக்கெட் விலை ரூ.200 எனவும், இவற்றை வாலாஜா சாலையில் உள்ள GATE 2ல் விற்பனை செய்யப்படுவதாகவும், IJK lower standக்கு டிக்கெட் விலை ரூ.400 எனவும், இவற்றை வாலாஜா சாலையில் உள்ள GATE 2ல் விற்பனை செய்யப்படுவதாகவும், KMK terrace க்கு டிக்கெட் விலை ரூ.1000 எனவும், இவற்றை விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் உள்ள GATE 1ல் விற்பனை செய்யப்படுவதாக" அறிவிக்கப்பட்டுள்ளது.