கவுகாத்தி: ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆஃப் சுற்று நாளை மறுநாள் தொடங்கவிருக்கிறது. கொல்கத்தா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளது. ஆனால், இதுவரை குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டரில் மோதப்போகும் அணிகள் யார் யார் என்று தீர்மானிக்கவில்லை.
அதனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் முடிவு செய்யும். இப்போட்டி கவுகாத்தியில் நடைபெறவிருக்கிறது. 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, கனமழையின் காரணமாக இன்னும் தொடங்கவில்லை.
இப்போட்டி ராஜஸ்தான் அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இப்போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி குவாலிபையர் 1-இல் கொல்கத்தா அணியுடன் மோதும். ஒருவேளை இப்போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தால், தற்போது உள்ள அதே 3வது இடத்தில் இருக்கும். எலிமினேட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும்.
இப்போட்டி இறுதியாக 10.56 மணி வரை நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். அப்படி நடக்கும்பட்சத்தில், 5 ஓவர் கொண்ட போட்டியாக நடக்கும். 10.56 மணி வரைக்கும் மழை நிற்கவில்லை, பிட்ச் தயாராகவில்லை என்றால், போட்டியானது கைவிடப்படும். இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.
இதையும் படிங்க: அபிஷேக் சர்மா அபாரம்.. லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த ஹைதராபாத்! - SRH VS PBKS