ஐதராபாத்: 19 வயதுக்குட்பட்டோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியை மலேசியா நடத்துகிறது. இந்நிலையில், போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்திய அணி போட்டியை நடத்தும் மலேசியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுடன் இணைந்து குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. குரூப் சி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, புதிதாக சமோவா நாடு மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து தகுதி பெறும் அணிகள் இடம் பெற்றுள்ளன. அதே நேரம் டி பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து மற்றும் ஆசியாவிலிருந்து தகுதி பெறும் அணி இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். நான்கு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். அதேநேரம் நான்கு பிரிவுகளில் கடைசி இடங்களை பிடிக்கும் அணிகள் ஜனவரி 24ஆம் தேதி முதல் பிளே ஆப் சுற்றில் மோதும்.
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி அரை இறுதி போட்டிகளும், பிப்ரவரி 2ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் என அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
அரைஇறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என்றும் ஏதேனும் காரணத்தால் அரைஇறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் தடைபடும் பட்சத்தில் மறுநாள் ரிசர்வ் டே-வாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் இந்திய மகளிர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜனவரி 19ஆம் தேதி பேயுமால் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய மகளிர் அணி விளையாடும் போட்டிகள்:
ஜனவரி 19: இந்தியா v வெஸ்ட் இண்டீஸ், பேயுமாஸ் ஓவல்
ஜனவரி 21: இந்தியா v மலேசியா, பேயுமாஸ் ஓவல்
ஜனவரி 23: இந்தியா v இலங்கை, பேயுமாஸ் ஓவல்
இதையும் படிங்க: நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் பயோபிக்! யார் ஹீரோ தெரியுமா? - Neeraj Chopra Biopic