ETV Bharat / sports

டிஎன்பிஎல் திருவிழா ஆரம்பம்.. சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி! - TNPL 2024 - TNPL 2024

TNPL 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 13 தமிழக வீரர்கள் இடம்பெற காரணமாக டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இருந்ததாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி பெருமிதம் தெரிவித்தார்.

டிஎன்பிஎல் செய்தியாளர்கள் சந்திப்பு
டிஎன்பிஎல் செய்தியாளர்கள் சந்திப்பு (Credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 4:41 PM IST

சென்னை: தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8வது சீசன் வரும் ஜூலை 5ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை சென்னை, கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. லீக் போட்டிகள் கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய மைதானங்களிலும், தகுதிச்சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் நத்தம் மைதானத்திலும், தகுதிச்சுற்று 2 மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு போட்டிகளும் மாலை 7.15 மணிக்கும், டபிள் ஹெட்டர் போட்டிகள் மதியம் 3.15 மணிக்கும் தொடங்கி நடைபெறவுள்ளன. பிளே ஆப் போட்டிகளின் போது மழை குறுக்கிட்டால் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளன. டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் என மொத்தமாக 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8வது சீசன் குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, துணைச் செயலர் பாபா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அஜய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, "கடந்த 7 சீசன்களாக தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கு ஆதரவு அளித்து பங்கீட்டாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சி துறையினர் அனைவருக்கும் நன்றி எனவும், உங்களால் மட்டுமே 8 வது ஆண்டில் டிஎன்பிஎல் அடியெடுத்து வைக்கிறது எனவும் பேசினார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் தமிழ்நாட்டில் இருந்து வீரர்கள் பங்கேற்று வருவதற்கு மிக முக்கிய காரணமாக டிஎன்பிஎல் இருக்கிறது எனவும், வாஷிங்டன் சுந்தர், வரும் சக்கரவர்த்தி, நடராஜன் உள்ளிட்ட வீரர்கள் இதன் மூலம் கிடைத்த வரவேற்பில் ஐபிஎல் தொடரில் தடம் பதிதுள்ளனர் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 2024 ஐபிஎல் தொடரில் மொத்தம் 13 தமிழ்நாடு வீரர்கள் விளையாடியுள்ளார்கள். இந்த பெருமை தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரையே சேரும்" எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

டிஎன்பிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் Paytm insider தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். முதற்கட்டமாக சேலம் மற்றும் கோவை ஆகிய மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை இந்த மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்கி விற்பனை செய்யபட்டு வருகிறது. போட்டிகள் வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், இந்த போட்டிகளை டிஜிட்டல் தளம் வாயிலாக பார்க்க விரும்புவோர் பேன் கோட் ஓடிடி தளம் மூலம் பார்க்கலாம்.

இதையும் படிங்க: மீண்டும் ரோகித் அதிரடி, அக்சர் அபார பந்துவீச்சில் இங்கிலாந்தை ஊதித் தள்ளிய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.