பார்படாஸ்: 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலக சாம்பியன்(world championship) பட்டத்தைத் தன்வசப்படுத்தியது இந்தியா அணி.
ஐசிசி(ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றில் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி இரண்டிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால், ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நுழைந்த பின்னர், எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர் இந்திய வீரர்கள், நேற்று(சனிக்கிழமை) இரவு பார்படாஸின் பிரிட்ஜ்டெளன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி டாஸை வென்றதுமே ரசிகர்களுக்கு மாபெரும் நம்பிக்கை பிறந்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டர்ன் ரோஹித் மற்றும் விராத் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும், வெறும் 9 ரன்களில் மகராஜ் வீசிய பந்தில் அவுட்டாகி ரோகித் சர்மா பெவிலியன் திரும்பியதும் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.பின்னா் வந்த ரிஷப் பந்த்தும் மகராஜ் வீசிய ஓவரிலேயே அவுட்டாகினார். அதனைத் தொடர்ந்து சூரியகுமாா் யாதவும் வெறும் 3 ரன்களுடன் ரபாடா வீசிய ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினாா். இதனால் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றத்திலிருந்தது.
The wait of 17 years comes to an end 🇮🇳
— T20 World Cup (@T20WorldCup) June 29, 2024
India win their second #T20WorldCup trophy 🏆 pic.twitter.com/z35z54ZQlI
இதனால் பொறுப்புடன் விளையாடிய விராத் கோலி - அக்சர் பட்டேல் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். நான்கு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசிய அக்சர் பட்டேல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர், கிங் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபோ அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்க்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய கிங் கோலி நிதானமாக விளையாடி 59 பந்துகளில் இரண்டு சிக்ஸர், ஆறு பவுண்டரிகளுடன் 59 பந்துகளில் 76 ரன்களை எடுத்திருந்த போது மார்கோ ஜேன்சன் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஷிவம் துபே 27 ரன்கள், ஜடேஜா 2 ரன்கள் என அடுத்தடுத்த சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்திருந்தது.
𝘾𝙃𝘼𝙈𝙋𝙄𝙊𝙉𝙎 🏆🇮🇳#T20WorldCup | #SAvIND pic.twitter.com/MlRcpUqhV0
— T20 World Cup (@T20WorldCup) June 29, 2024
இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா: 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி புறப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் நிலைத்து ஆடிய போதும் எட்டு விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்த தென் ஆப்ரிக்க வீரர்களுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணிக்கு குவியும் வாழ்த்து: 13 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை முத்தமிட்டுள்ள ஹிட் மேன் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: LIVE: தென் ஆப்பிரிக்கா வெற்றி முகம்! - IndvsSA T20 World Cup Cricket Final