ETV Bharat / sports

ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி! - RR Vs GT - RR VS GT

RR Vs GT: ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Apr 11, 2024, 6:52 AM IST

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2024 போட்டிகள் தொடங்கி, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று (ஏப் 10) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்கள் குவித்தார். இதில், 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சாம்சன் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்து 68 ரன்கள் எடுத்தார். மேலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதேநேரம், குஜராத் அணியின் உமேஷ், ரஷீத் கான் மற்றும் மொஹித் சர்மா தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனையடுத்து, 197 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட அரைசதம் கடந்த நிலையில் 72 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.

அதேபோல், சாய் சுதர்சன் 35 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் சென் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ செய்யப்பட்டார். இருப்பினும், அடுத்தடுத்த வீரர்களின் நிதானமான ரன் சேர்ப்பால், குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதில், குல்தீப் சென் குஜராத் அணியின் 3 விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்த நிலையில், 3 வெற்றி 3 தோல்வி என குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று 6வது இடத்தில் உள்ளது. அதேநேரம், 5 போட்டிகளில் களம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ், முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணி மூலம் தோல்வியைச் சந்தித்துள்ளது. இருப்பினும், 8 புள்ளிகள் உடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க: CSK Vs KKR: சென்னை பந்துவீச்சில் சுருண்ட கொல்கத்தா! ஜடேஜா, தேஷ்பாண்டே அபாரம்! - IPL 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.