ETV Bharat / sports

மீண்டும் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்.. ரேஸ் பிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்! - formula 4 car race in chennai - FORMULA 4 CAR RACE IN CHENNAI

Formula 4 car race in chennai: புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது.

ஃபார்முலா 4 கார் பந்தயம்
ஃபார்முலா 4 கார் பந்தயம் (Credits - getty images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 5:21 PM IST

சென்னை: சென்னையில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சில நாட்களில் சென்னை சாலைகளில் கார் பந்தயம் நடத்துவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் போட்டியை நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டிகள் மீண்டும் வருகிற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா 4 பந்தயம், சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

அதன்படி, தீவுத்திடலில் தொடங்கும் கார் பந்தயமானது அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலைச் சென்றடைவது போல இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவு நேரத்தில் சாலை வழியாக நடத்தப்படும் கார் பந்தயம் இது என்பதால், மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்தது.

போட்டிக்கான பார்வைக் கட்டணமாக, "ப்ரீமியம் ஸ்டாண்ட் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் ரூ.3,999, இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.6,999, கிரான்ட் ஸ்டாண்ட் 1 முதல் 5க்கான டிக்கெட் கட்டணம் ரூ.1,999 , கிரான்ட் ஸ்டாண்ட் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூபாய் 2,499, கோல்டு லவுஞ்ச் ஒரு நாள் டிக்கெட் கட்டணம் 7,999, வார இறுதி நாட்களில் கோல்டு லவுஞ்ச் டிக்கெட் கட்டணம் ரூ.13,999, பிளாட்டினம் லவுஞ்ச் கட்டணம் ரூ.12,999 மற்றும் வார இறுதி நாட்களில் ரூ.19,999" எனவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு ((Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: முதல்முறை ஒலிம்பிக்கிலேயே இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பிரித்திவிராஜ் தொண்டைமான்.. பதக்க அறுவடை தொடருமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.