ஜோகன்னர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மைக் ப்ராக்டர் (77) நேற்று உயிரிழந்தார். மைக் ப்ராக்டருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.
மைக் ப்ராக்டர், தென் ஆப்பிரிக்கா அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் (1969 - 1970) விளையாடியுள்ளார். அந்த 7 போட்டிகளும் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக விளையாடிய நிலையில், 15.02 என்ற பவுலிங் சதவிதத்தில் 41 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். மைக் ப்ராக்டர் பங்கேற்ற 7 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி தோற்கவில்லை.
மேலும், ப்ராகடர் தனது பேட்டிங் திறமைக்கு பெயர் பெற்றவர். 1969 - 70-இல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 4-0 என முழுத் தொடரையும் வென்றது.
அப்போது ப்ராக்டர் பேட்டிங் தென் ஆப்பிரிக்கா வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. தென் ஆப்பிரிக்கா அணி 1992ஆம் ஆண்டில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, அணியின் பயிற்சியாளராக ப்ராகடர் இருந்தார். அப்போது 1992 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பின்னர் 2002 முதல் 2008 வரை ஐசிசி நடுவராக பணியாற்றினார்.
இதையும் படிங்க: தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்… காரணம் என்ன?