ETV Bharat / sports

ஐபிஎல் 2024; தவறான ஷாட்டால் ஹர்ஷித் ராணாவிடம் விக்கெட்டை பறிகொடுத்த ஃபாஃப் டு பிளெசிஸ்! - KKR Vs RCB - KKR VS RCB

RCB Vs KKR: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Bangalore
பெங்களூரு
author img

By PTI

Published : Mar 29, 2024, 7:56 PM IST

பெங்களூரு: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 9 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று தொடரின் 10வது போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் களம் இறங்கி விளையாடினர். முதல் ஓவர் முடிவில் 7 ரன்கள் எடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 2வது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணாவிடம் விக்கெட்டை இழந்தது. அந்த ஓவரின் 5வது பந்தில் சிக்சர் அடித்த ஃபாஃப் அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 21 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 4 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர்.

இரு அணிக்களுக்கான பிளேயிங் 11

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், க்ளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அல்சாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ராமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

இதையும் படிங்க: "எனது சின்னம் இல்லாமல் எவராலும் ஓட்டு கேட்க முடியாது" - பரப்புரையில் பேசிய சீமான்! - Seeman Speech In Tenkasi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.