கயானா (வெஸ்ட் இண்டீஸ்): ஐசிசி டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம், வென்ஸ் இண்டீசின் கயானாவில் இன்று நடைபெற்றது. அங்குள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 8 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால் போட்டி நடைபெறும் மைதானத்தில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இப்போட்டி நடைபெறுமா என்று கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.
அவர்களின் காத்திருப்பு வீண் போகாதவாறு, இந்திய நேரப்படி இரவு 8:45 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டி துவங்கியது. அதாவது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தமது அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
முன்னதாக, கயானாவில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை கருத்தில் கொண்டே, இன்றைய போட்டிக்கு 250 நிமிடங்கள் கூடுதலாக அளிக்கப்பட்டிருந்தது.
இன்றைய போட்டியில் விளையாடும் டீம் லெவன் இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்). சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்த்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
இதையும் படிங்க: 32 வருடத்தில் முதல் முறையாக உலகக் கோப்பை ஃபைனலுக்கு தகுதி.. சோக்கர்ஸ் விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்பிரிக்கா!