ETV Bharat / sports

இந்தியா Vs இங்கிலாந்து முதல் டெஸ்ட்; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு! - இங்கிலாந்து பேட்டிங்

IND Vs ENG: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து முதல் டெஸ்ட்; டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 10:24 AM IST

ஹைதராபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடக்கும் 9வது டெஸ்ட் போட்டி ஆகும். அதேபோல் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடக்கும் 6வது டெஸ்ட் போட்டியாகும். இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய பங்கு வகிக்கும்.

இன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாகக் காட்சியளிக்கிறது. கோலி விளையாடாத நிலையில், ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் டாப் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். மிடில் ஆர்டரில் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

சுழற்பந்து வீச்சு குழுவிற்கு அஷ்வின் தலைமை வகிக்கிறார். சுழற்பந்து வீச்சிற்கு ஒத்துழைக்கும் ஆடுகளமாகப் பார்க்கப்படும் ஹைதராபாத்தில் அஷ்வினுடன் ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, சிராஜ் களமிறங்கியுள்ளனர்.

அதே போல் இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டரில் க்ராவ்லி, டக்கெட், போப் ஆகியோரும் மிடில் ஆர்டரில் ஜோ ரூட், பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க: ஐசிசி ஒருநாள் அணி வெளியீடு: கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்! இந்திய வீரர்கள் ஆதிக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.