ETV Bharat / sports

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து புது மைல்கல்! இந்தியா பின்னடைவு! - World Test Championship 2024 - WORLD TEST CHAMPIONSHIP 2024

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிக வெற்றிகள் பெற்று இங்கிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.

Etv Bharat
Indian Team (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 2, 2024, 3:48 PM IST

ஐதராபாத்: இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 427 ரன்களும், இலங்கை 196 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 231 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து 482 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே (55 ரன்), விக்கெட் கீப்பர் தினேஷ் சண்டிமால் (58 ரன்), கேப்டன் தனஞ்செய டி சில்வா (50 ரன்) ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இறுதியில் 86.4 ஓவர் முடிவில் இலங்கை அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 2-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மேலும், இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் கீழ் நடைபெறுவதால் இங்கிலாந்து மேலும் ஒரு மைல்கல்லையும் படைத்து உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிக போட்டிகளை வென்ற அணி என்ற சிறப்பை இங்கிலாந்து பெற்று உள்ளது. இதுவரை 58 ஆட்டங்களில் விளையாடி உள்ள இங்கிலாந்து, அதில் 29 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இங்கிலாந்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா 46 ஆட்டங்களில் 28 வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா 46 போட்டிகளில் 28 வெற்றி பெற்று உள்ளது. நியுசிலாந்து 31 ஆட்டங்களில் 15 வெற்றி, தென் ஆப்பிரிக்கா 34 ஆட்டங்களில் 10 வெற்றி என அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளன. பாகிஸ்தான் அணி 32 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இலங்கை 30 ஆட்டங்களில் 9ல் மட்டுமே வெற்றி பெற்று 7வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: Paralympics 2024: வட்டு எறிதலில் இந்தியாவுக்கு பதக்கம்! - Yogesh Kathuniya silver medal

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.