ETV Bharat / sports

கொல்கத்தாவுக்கு தாவிய சென்னை கை! ஓய்வு அறிவித்த அடுத்த நொடியே தேடி வந்த பொறுப்பு! - IPL 2025

வரும் ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவெய்ன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
IPL Cup (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 27, 2024, 12:28 PM IST

ஐதராபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு பதிலாக கொல்கத்தாவின் ஆலோசகராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவி வந்தது.

இந்நிலையில், வரும் ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவெய்ன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்து இருந்தார். இந்நிலையில், கொல்கத்தா அணியின் அலோசகராக பிரவோவை நியமித்து அந்த அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொல்கத்தா அணியுடன் பிராவோ இணைவது மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான வளர்ச்சியாகும்.

எங்கு விளையாடினாலும் வெற்றி பெற வேண்டும் என்பது அவரது ஆணித்தரமான ஆசையாக இருக்கும், அவரது திறமை மற்றும் அணுபவம் அணி மற்றும் வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும், கரீபியன் பிரிமீயர் லீக், மேஜர் கிரிக்கெட் லீக், சர்வதேச டி20 லீக் ஆகிய தொடர்களிலும் பிராவோ எங்களுடன் தொடர்ந்து பயணிப்பார் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக பிராவோ விளையாடி உள்ளார். மேலும், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்களில் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பிராவோ செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின் கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடி வந்தார்.

40 வயதான பிராவோ கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வந்தார். மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பிராவோ செயல்பட்டு வந்தார். தொடர்ந்து கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்த நிலையில் தற்போது அதில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்; தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத் தொகை.. யார் யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்? - AICF Announces Cash Reward

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.