ETV Bharat / sports

பிறந்த நாளில் ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்! கடைசி வரை நிராசையான விருப்பம்? - Dinesh Karthik announces retirement

அனைத்து வகையிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

Etv Bharat
Dinesh Karthik (Photo: IPL/BCCI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 12:14 PM IST

டெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில நாட்களாக நான் பெற்ற அன்பும் ஆதரவும் அளவிட முடியாதவை. இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும், அன்பும்.

அண்மைக் காலமாக நிறைய யோசித்து கிரிக்கெட்டிலிருந்து விலகிவிடலாம் என முடிவெடுத்துள்ளேன். தற்போது அதிகாரபூர்வமாக எனது ஓய்வை அறிவிக்கிறேன். தொடர்ந்து எனக்கு முன்னால் இருக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ள்ள காத்திருக்கிறேன். இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம். இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர்.

அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணை நின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன். விளையாட்டை பின்பற்றும் ரசிகர்களுக்கும், பாலோவர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் ஆதரவில்லாமல் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட்டும், நிலைத்திருக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். தனது 19வது வயதிலேயே இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார். கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். முன்னதாக நடப்பு சீசனுடன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்காக 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் அதில் ஆயிரத்து 792 ரன்கள் மற்றும் ஒன்பது அரைசதம் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் 42 போட்டிகளில் ஆயிரத்து 25 ரன்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 60 ஆட்டங்களில் 686 ரன்கள் குவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 257 ஆட்டங்களில் விளையாடி உள்ள தினேஷ் கார்த்திக் அதில் 22 அரைசதம் உள்பட 4 ஆயிரத்து 842 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 15 ஆட்டங்களில் விளையாடி 326 ரன்களை தினேஷ் கார்த்திக் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: மறக்க முடியாத 2007 டி20 உலகக் கோப்பை.. ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? - ஓர் அலசல்! - T20 World Cup 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.