பெங்களூரு: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.12) இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 62வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தரவரிசை பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் பெங்களூரு அணி 5ல் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.
இரண்டு அளிகளுக்குமே அடுத்த சுற்றான பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பில் தொடர முடியும். அதேநேரம் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் பிளே ஆப் வாய்ப்பு என்பது குறைவு தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில், அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதை அடுத்து ஒரு போட்டியில் விளையாட கேப்டன் ரிஷப் பன்ட்க்கு ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதனால் இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பன்ட்க்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியை வழிநடத்த உள்ளார். நடப்பு சீசனில் முதலிம் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பெங்களூரு அணி தற்போது சுறுசுறுப்பாக விளையாடி வருகிறது. அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர இரு அணிகளுமே இன்று மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க: சென்னைக்கு 142 ரன்கள் வெற்றி இலக்கு! சிமர்ஜித் சிங், துஷார் தேஷ்பாண்டே அபார பந்துவீச்சு! - IPL 2024 CSK Vs RR Match Highlights