அகமதாபாத் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.17) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் தொடங்கும் 32வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் தலா 3 வெற்றி மற்றும் தோல்வியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி 6வது இடத்தில் உள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தி இருந்தது.
நடப்பு சீசனில் தொடர்ந்து ஏறுமுகம் காட்டி வந்த ராஜஸ்தான் அணியை அதன் சொந்த ஊரில் வீழ்த்திய வேகம் குஜராத் வீரர்களுக்கு இன்னும் இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள். அதேபோல், டெல்லி கேபிட்டல்ஸ் விளையாடிய 6 ஆட்டங்களில் 2ல் மட்டும் வெற்றி பெற்றும் மீதமுள்ள 4 ஆட்டங்களை கோட்டைவிட்டது.
கடைசியாக மும்பை மற்றும் கொல்கத்தாவிடம் அடுத்தடுத்து தோல்வியை கண்ட டெல்லி அணி, கடைசி ஆட்டத்தில் லக்னோ அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் சற்று ஆறுதல் கண்டது. இந்த ஆட்டத்திலும் வென்று தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க டெல்லி அணி முயற்சிக்கும். அதேநேரம் வெற்றிக்காக குஜராத் அணியும் கடுமையாக போராடும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக விளையாடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :
குஜராத் டைட்டன்ஸ் : சுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்.
டெல்லி கேபிட்டல்ஸ் : பிருத்வி ஷா, ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பன்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது.
இதையும் படிங்க : விராட் கோலிக்கு மெழுகு சிலை! ஜெய்ப்பூர் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் நிறுவல்! - Virat Kholi Wax Statue