ஐதராபாத்: உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து ஆட்டத்தில் சிறந்த வீரராக வலம் வரும் இவரை நேரில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வகையில் சீனாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரொனால்டோ, கடந்த பிப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. இதனிடையே அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த பயணம் எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டது. அவரை பார்க்க ஆவலாக இருந்த சீன ரசிகர் காங் இதனால் மிகவும் வருத்தமடைந்தார். இதனையடுத்து அவரை நேரில் பார்க்க சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டார்.
A Chinese fan is at Al Nassr headquarters to see Cristiano.
— Al Nassr Zone (@TheNassrZone) October 20, 2024
He traveled 13,000 km, 6 months and 20 days on a bike, he came from China to Saudi Arabia to meet his role model, Cristiano Ronaldo ❤️
[@MousaQi] pic.twitter.com/XYwWA3hqQt
அதன்படி சீனாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சைக்கிளில் வந்து ரொனால்டோவை சந்தித்துள்ளார். இந்த பயணத்தை கடந்த மார்ச் 18ஆம் தேதி சீனாவில் தொடங்கிய காங் 7 நாடுகளில் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து அக்டோபர் 20 ஆம் தேதி சவுதி அரேபியா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 6 மாதங்கள் 20 நாட்களில் இந்த பயணத்தை காங் முடித்துள்ளார்.
One of Ronaldo's Chinese fans rode a bicycle 13,000 km to meet the Portuguese star after the match against Al Shabab
— CR7 BASE (@cr7base) October 22, 2024
The journey took the fan 6 months and 20 days. He didn't have money for a flight, so he chose this unusual way to reach Saudi Arabia#AlNassrEsteghlal #Cristiano pic.twitter.com/iwXdIvnTbB
இறுதியாக ரொனால்டோவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் ரொனால்டோ ஆட்டோகிராப் போட்ட ஜெர்சியையும் காங் பரிசாக பெற்றுக் கொண்டார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: பலோன் டி ஓர் விருதை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த ஸ்பெயின்! விருது வென்றவருக்கு என்ன கிடைத்தது?