ETV Bharat / sports

ஐபிஎலால் வாழ்க்கையை தொலைத்த வீரர்கள்! என்ன நடந்தது? - IPL Cricket

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 4:40 PM IST

ஐபிஎல் போன்ற லீக் கிரிக்கெட்டுகளில் விளையாடுவதில் அதிக கவனம் செலுத்தியதால் உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் மத்திய ஒப்பந்தத்தை இழந்த வீரர்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Trent Boult, Jason Roy, Mohammad Hafeez (ANI)

ஐதராபாத்: முப்பரிமாணங்களை கொண்ட கிரிக்கெட்டின் முக்கியத்தக்க அம்சமாக டி20 பார்மட் காணப்படுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை மட்டுமே கண்டு களித்த ரசிகர்களுக்கு புது ரசனை மற்றும் த்ரிலிங்கை கொடுக்கும் போட்டியாக 20 ஓவர் கிரிக்கெட் மாறியது.

முதன் முதலாக 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையே ஆக்லாந்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பல்வேறு பரிமாணங்களில் டி20 கிரிக்கெட் போட்டி விசாலமடைந்தது. ஐபிஎல், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் என 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நாடுகளில் புதிய பெயர்களில் லீக் தொடராக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

20 ஓவர் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கு ஏற்றார் போல் லீக் ஆட்டங்களில் சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு மெருகேற்றப்படுகின்றன. டி20 கிரிக்கெட்டின் அடுத்த கட்ட தற்போது டி10 கிரிக்கெட் லீக் தொடர்களும் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த டி20 லீக் தொடர்கள் மூலம் தங்கள் நாட்டு அணிக்காக மட்டுமே விளையாடி வந்த வீரர்கள் அதைத் தாண்டி உலக அளவில் பல்வேறு அணிகளுக்காக விளையாடத் தொடங்கினர்.

அதற்கு பிசிசிஐயின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தான் அச்சாரம் போட்டது. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட நிலையில், அதன் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் 20 ஓவர் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐபிஎல் போன்ற லீக் தொடர்கள் வருவதற்கு முன்னர் வரை சொந்த நாட்டு அணிக்காக விளையாடுவதன் மூலம் வரும் தொகை மற்றும் விளம்பரம் உள்ளிட்டவற்றின் மூலமே வீரர்கள் வருவாய் ஈட்டி வந்தனர்.

டி20 லீக் தொடர்களுக்கு பின் வீரர்கள் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடுகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் போன்ற 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடுவதில் கவனம் செலுத்தி சொந்த நாட்டு மத்திய ஒப்பந்தத்தை இழந்த வீரர்கள் சில பேரை தற்போது காணலாம்.

முகமது ஹபீஸ்: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஹபீஸ், லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் அதிக ஆர்வம் செலுத்திய அடுத்து உள்நாட்டு போட்டிகளில் சரிவர விளையாடத் தொடங்கினார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை சி பிரிவு வீரர்கள் பட்டியலுக்கு இறக்கி சம்பளத்தையும் கணிசமாக குறைத்தது.

டிரென்ட் பவுல்ட்: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு லீக் ஆட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியதை அடுத்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

ஜேசன் ராய்: இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேசன் ராய் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தொடங்கியதை அடுத்து அவரும் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஜேசன் ஹோல்டர், கைல் மெயர்ஸ், நிகோலஸ் பூரன்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களான ஜேசன் ஹோல்டர், கைல் மெயர்ஸ், நிகோலஸ் பூரான் ஆகியோர் வெளிநாட்டு லீக் தொடர்களில் அதிக கவனம் செலுத்த உள்நாட்டு மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்கான் வீரர்கள்: அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியின் முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோரும் டி20 லீக் போட்டிகளில் அதிகளவில் விளையாடுவதற்காக உள்நாட்டு மத்திய ஒப்பந்தத்தை வேண்டாம் என நிராகரித்தனர்.

நியூசிலாந்தில் அதேநிலை: உள்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அளிக்கும் தொகையை காட்டிலும், லீக் போட்டிகளில் அதிக பணம் கிடைக்கும் என்பதால் வீரர்கள் மத்திய ஒப்பந்தங்களை நிராகரிப்பதாக சொல்லப்படுகிறது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கேன் வில்லியம்சன் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் முதன்முதலாக உள்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தை புறக்கணித்தனர்.

அவர்களை தொடர்ந்து தற்போது அடம் மிலினே, டேவான் கான்வாய், பின் அலென் ஆகியோர் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தை புறக்கணித்து லீக் தொடர்களில் விளையாட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அறிவிப்பு! எப்போ? எங்கே? முழு விபரம்! - World Test Championship

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.