சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியினை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த தொடரில் புதிதாக களமிறங்கியுள்ள அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகளுடன் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி டிடிசி, யு மும்பா டிடி, புனேரி பல்தான், பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ் என மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன.
8 அணிகளும் 4 இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு அணி தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை பலப்பரீட்சை நடத்தும். அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 5 மோதலில் விளையாடும். லீக் சுற்றில் மொத்தம் 20 மோதல்கள் இடம்பெறும். இந்த தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள், 2 மகளிர் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆட்டம் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்தப்படும்.
இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன் படி நேற்று நடைபெற்ற மனிகா தலைமையிலான பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணிகள், சென்னை லயன்ஸ் அணிகள் இடையேயான லீக் போட்டியில் 11-4 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி தோல்வி அடைந்தது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் புனேரி பால்தான்ஸ் அணி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணியை 10-5 புள்ளி கணக்கில் வீழ்த்தியது.
இதையும் படிங்க: திடீரென ஓய்வை அறிவித்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி! - Shikhar Dhawan